சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை விரிவாக்குவது தொடர்பில் தீர்மானிக்க அதிகாரிகள் நாளை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் பெடரல் கவுன்சில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை தற்போது தவிர்த்திருக்கிறது. ஒமிக்ரான், தொற்றின் ஆபத்து தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைக்காததால் அதிகபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அதிகாரிகள் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார்கள்.
கூட்டாட்சி அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடிய புதிய தகவல்கள் வரும் புதன் கிழமைக்குள் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அவசர சிகிச்சை பிரிவுகளின் தேவை அதிகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கு அடுத்த வாரத்தில் புதிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை தவிர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.