சுவிட்சர்லாந்து அரசு, பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகளை தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron என்ற புதிய வைரஸ் மாறுபாடு, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதனை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத்தடையை அறிவித்தது.
அதன்பின்பு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தங்கள் நாட்டு குடிமக்கள் இந்த நாடுகளிலிருந்து வந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. தற்போது, ஓமிக்ரான் வகை மாறுபாடு கண்டறியப்பட்ட செக் குடியரசு, எகிப்து, நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் மலாவி ஆகிய 5 நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்து அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இந்த நாடுகளிலிருந்து வரும் மக்கள் தங்களுக்கு தொற்று இல்லை என்ற ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 10 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் அறிவித்திருக்கிறது.