பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்காக மாடர்னா தடுப்பூசியை ஸ்வீடன் அரசு தடை செய்துள்ளது.
உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வீடனில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாடர்னா தடுப்பூசியினால் இளைஞர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தொடர்ந்து ஆராய்ந்ததை அடுத்து தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ஜூலை மாதம் ஐரோப்பியா மருத்துவ முகாம் 12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்திருந்தது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் மாடர்னா தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது. ஆனால் ஸ்வீடனில் மட்டும் மாடர்னாவிற்கு பதிலாக பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.