Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைக்க தூண்டும் “பாலாட பாயாசம்”

தேவையான பொருட்கள்

  • அடை                – அரை கப்
  • பால்                   – ஒரு லிட்டர்
  • சர்க்கரை          – ஒரு கப்
  • ஏலக்காய்        – 2
  • முந்திரி            –  எட்டு
  • நெய்                  –  2 டீஸ்பூன்

செய்முறை 

முதலில் அடையை நன்றாக சுத்தம் செய்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் அடையை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.

பின்னர் காய்ச்சிய பாலில் ஊற வைத்துள்ள அடைய சேர்க்கவும்.

அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடுவது நன்று .

பால் நுரையாக வரும் பொழுது சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கவும்.

மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிகளை  போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

ஏலக்காயை பொடி செய்து முந்திரியுடன் சேர்த்து பாயசத்தில் சேர்க்கவும்.

சிறிது நேரம் கழித்து இறக்கி விடலாம்.

இப்போது சுவைமிகுந்த பாலாட பாயாசம் தயார்.

Categories

Tech |