Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பிடும் சுவைமிக்க “ரச மலாய்”

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இடம் ரச மலாய் செய்வது பற்றி இந்த தொகுப்பு

தேவையான பொருட்கள்

பால்                                    1 லிட்டர்

சர்க்கரை                           இனிப்பிற்கு தகுந்தார்போல்

வினிகர்                             1/2  ஸ்பூன்

ஏலக்காய்                          4

குங்குமப்பூ                       1/4 ஸ்பூன்

 

செய்முறை

முதலில் 1/2 லிட்டர்  பாலை நன்றாக காய்க்கவும்.

காய்ந்த பாலில் வினிகரை ஊற்றி திரிந்தவுடன் இறக்கிவிடவும்.

ஒரு துணியில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும்.

இப்பொழுது பன்னீர் தயாராக உள்ளது.

சிறிது நேரம் காத்திருந்து தயாரான பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.

பின்னர் மீதியுள்ள 1/2 லிட்டர் பாலை ஊற்றி நன்றாகக் காய்ச்சி அதில் குங்குமப்பூ சர்க்கரை மற்றும் ஏலக்காய் போட்டு நன்றாக கலக்கவும்.

பால் நன்றாக காய்ந்த பின்னர் செய்து வைத்திருக்கும் பனீர் உருண்டைகளை அதில் போட்டு மூடி விடவும்.

சிறிது நேரம் கழித்து அதை திறந்து மெதுவாக கிளறி விட்டால் சுவையான ருசிமிக்க ரசமலாய் ரெடி.

Categories

Tech |