சுவையான காரக்குழம்பு…!!
அரைத்து கொள்ள தேவையானவை:
நல்லஎண்ணெய் – 3 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
வத்தல் – 2
தனியா – 2 டீஸ்பூன்
தேங்காய் – தேவையானவை
காரகுழம்பிற்கு தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையானவை
கடுகு – சிறிதளவு
வத்தல் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 4 அரிசி
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 10
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
வத்தல் தூள் – 1 டீஸ்பூன்
அரைத்த விழுது – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
புளி – ஒரு எலுமிச்சை அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் நல்லஎண்ணெய் சிறிது விட்டு அதில் வெந்தயம், மிளகு, சோம்பு, தனியா, சீரகம், வத்தல் 2, தேங்காய், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கசகசா,பட்டை இவை அனைத்தையும் எண்ணெயில் பொன்னிறமாக வாட்டி எடுத்து, விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சமையல் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் சிறிது கடுகு, கறிவேப்பில்லை, வத்தல் 3, போட்டு வதக்க வேண்டும். அதன் பின் சின்ன வெங்காயம் நறுக்கி வைத்திருப்பதை போட்டு நன்கு பொன்னிறமாக வரும்வரை வதக்கி கொள்ள வேண்டும்.
அதன் கூட தக்காளி 3 நறுக்கி வைத்திருப்பதையும் போட்டு நன்கு கிளற வேண்டும்.மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, எல்லாம் ஒரு டீஸ்பூன் போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும். அதனுள் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு, புளி கரைசலையும் ஊற்றி, சிறிதளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவேண்டும்..சுவையான, எளிமையான காரக்குழம்பு ரெடி…!!!