சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஏழு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும் 13 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தமாக 25 நபர்கள் கடந்த 13-ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வால்பாறை பகுதியில் தங்கியிருந்து சுற்றுலா தளங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் வால்பாறையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது மலைப்பாதையில் இருக்கும் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் வேனில் சென்றவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற நபர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து விபத்தில் ஏழு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. பின் மற்றவர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.