சவுதி அரேபியாவில் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள சுற்றுலா தலங்களுக்குள் நுழையலாம் என்று அந்நாட்டு அரசு புதுவித உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதேபோல் தொற்று குறைந்த நாடுகளும் கொரோனாவிற்காக போடப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வருகிறது.
அதன்படி சவுதி அரேபியாவில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் 18 மாதங்களாக முடங்கிக் கிடந்த சுற்றுலா தலங்களை அந்நாட்டு அரசு மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டு புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டுவந்துள்ளது.
அதாவது அமெரிக்கா மற்றும் சீனா உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளில் எவரெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களோ அவர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள சுற்றுலா தளங்களுக்குள் நுழையலாம் என்று சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.