Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றி திரிந்த சிறுத்தை…. படம்பிடித்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வனப்பகுதியின் வழியாக செல்லும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தை ஒன்று நடமாடியதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மைசூரு நெடுஞ்சாலையில் காரில் சென்ற சிலர் சுற்றி திரிந்த சிறுத்தையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதன்பின் சிறுத்தை சிறிது நேரத்திற்கு பிறகு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியபோது, யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் சாலையோரம் சுற்றி திரிந்தால் அதனருகில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் செல்போனில் படம் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்யும்போது சிறுத்தைகள் திடீரென்று அவர்களை தாக்க கூடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |