நடிகர் ஆர்யா நடிக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் 41வது பிறந்தாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து கேக் வெட்டி படக் குழுவினருடன் இணைந்து ஆர்யா தன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படக்குழு சார்பாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, டைரக்டர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்றனர்.