Categories
டென்னிஸ் விளையாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்ட …. ரஷிய டென்னிஸ் வீராங்கனையை…. கைது செய்த போலீசார் …!!!

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவாவை  போலீசார் கைது செய்தனர்.

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் பிரிவில், ரஷிய வீராங்கனையான  சிஜிக்கோவா 101வது இடத்தில் உள்ளார் . இவர் கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவுக்கான  ,முதல் சுற்றுப் போட்டியில் மேடிசனுடன் இணைந்து , ருமேனியாவை சேர்ந்த  ஆண்ட்ரியா- பாட்ரிஷியா ஜோடிக்கு எதிராக விளையாடி, தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியின் முடிவு குறித்து வழக்கத்தைவிட, அதிகமானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வந்தன.

விசாரணையில் டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவா, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. அதோடு அந்தப் போட்டியில் அவர், வேண்டும்மென்று தவறு செய்தது  உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான சிஜிக்கோவா , பாரிஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்  . அதோடு அவரிடம் சூதாட்டம் தொடர்பாக  விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில்  கலந்துகொண்ட , சிஜிக்கோவா முதல் சுற்றில்  தோல்வியை சந்தித்தார்.

Categories

Tech |