Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பால்” கொள்முதல்…. விற்பனையில் முறைகேடு….. 3 பேர் பணியிடை நீக்கம்…!!

திண்டுக்கல்லில் பாலை பதப்படுத்தும் ஆவின் தொழிற்சாலையில் முறைகேடு செய்த நபர்களை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் ஆவின் நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால்கள்  அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. பின் அவைகள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு  பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும் இங்கு பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்  தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில்  அதிகாரிகள் நேற்றைய தினம் இந்த தொழிற்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அறிக்கையானது நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் மூன்று முக்கிய பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

Categories

Tech |