Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் நடிகை ரியாவிடம் மீண்டும் விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமான தொடர்பாக நடிகர் ரியாவிடம்  அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்  பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என்று அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில் சுஷாந்த் சிங் மற்றும் அவரது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து நிரநிர வைப்பு நிதியில், 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் ஆடிட்டர் க்கு மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு ரியாவின் தூண்டுதல் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் நடிகை ரியாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

 

Categories

Tech |