Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை – டெல்லி எய்ம்ஸ் தகவல்…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாசக்கரபோர்த்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே  சுஷாந்த் மரணம் தொடர்பாக  ஆய்வு செய்து சிபிஐ இடம் அதை அழிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தீவிர ஆய்வு மேற்கொண்ட நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும், அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மருத்துவ குழுவின் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விஷம் கொடுக்கப்பட்டோ கழுத்து நெரிக்கப்பட்டோ கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என மருத்துவ குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |