Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் மரண வழக்கு: தீபிகா படுகோனேவிடம் 5 மணிநேர விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே இடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது,  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ்  நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல நடிகைகளின் பெயர்களை அவர் கூறியதாக தெரிகிறது.

இதை அடுத்து போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், சுரதா கபூர் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதை அடுத்து நடிகை ராகுல் பிரீத் சிங் நேற்று முந்தினம் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் நடிகைகள் சுரதா கபூர் மற்றும் சாரா அலி கான் இடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ரவி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |