சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
![]()
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காத்திருப்பதால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . ஏனெனில் இந்த படத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் நடிக்க இருப்பதால் ஒட்டுமொத்த குழுவினரின் பாதுகாப்பை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது . தற்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது .