சன் தொலைக்காட்சியில் வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான சூரரைப் போற்று படம் ஒளிபரப்பாகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடியில் வெளியான படம் சூரரை போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களாலும் ,விமர்சகர்களாலும்,திரையுலக பிரபலங்களாலும் பாராட்டைப் பெற்றது .
கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைமில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது . இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தில் சூரரைப் போற்று படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .