நடிகர் சூர்யா ஹாலிவுட் லெவல் கதையை மிஸ் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடைசியாக இயக்கிய சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இதையும் விட சூப்பரான ஒரு கதையை சூர்யாவுக்காக கே.வி.ஆனந்த் எழுதி வைத்திருந்தார். அந்தக் கதை மார்வெல் ரேஞ்சுக்கு இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க கே வி ஆனந்த் திட்டமிட்டிருந்தார்.
இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவிற்கும் இவர் ஒரு கதை எழுதி வைத்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்த இவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.