பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார்.
தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, விஜய், தனுஷ் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். மேலும்
அண்மையில் நடிகர் சூர்யா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், அந்த வீடியோ பதிவில் “சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் எடுப்பார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர்” என சூர்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த விமர்சனத்திற்கு பிறகு சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ச்சியாக போனில் மிரட்டுகிறார்கள் என மீரா மிதுன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதுகுறித்து மீரா மிதுன் கூறியதாவது,”சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.
உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா? 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு. இது என்னை உறுதியற்ற நிலைக்கு துாண்டுகிறது. என அவர் குற்றம்சாட்டியுள்ளார். நடிகை மீரா மிதுன், சூர்யாவுடன் இணைந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.