தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்காலிகமாக பெயடப்பட்டுள்ள சூரியா 42 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.