முத்துப்பேட்டை அருகில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் காசிநாதன் மனைவி கோவிந்தம்மாள் (103) வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகனும், 1 மகளும், 8 பேரன்களும், 5 பேத்திகளும், 8 கொள்ளுப் பேரன்களும், 5 கொள்ளு பேத்திகளும் இருக்கின்றனர்.
இதனையடுத்து மூதாட்டி கோவிந்தம்மாள் உடல் ஆரோக்கியத்துடன் தினசரி தனது பணிகளை தானே சுறுசுறுப்பாக செய்து வந்துள்ளார். அதன்பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வீட்டில் இருந்து தபால் ஓட்டை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் வயது மூத்தவராக இருந்த கோவிந்தம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் திடீரென பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.