நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து விழுப்புரத்தில் 28 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
நிவர் புயல் எதிரொலியாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 31.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. முன்னதாக அதிகபட்சமாக கடலூரில் 24.6 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 23.7 சென்டி மீட்டர் மழையும் பதிவான நிலையில் சென்னையின் புறநகரான தாம்பரத்தில் 31 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது.
நிவர் புயல் பெருமளவிற்கு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் பெரும் மழையை கொடுத்திருக்கிறது. கடலூர், பாண்டிச்சேரி அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் பெருமளவு மழை பெய்திருக்கிறது. விழுப்புரத்தில் 28 சென்டி மீட்டர், சென்னை ஆட்சியர் அலுவலக பகுதியில் 28 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதை பார்க்க முடிகிறது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு பல்வேறு இடங்களில் மக்கள் சிரமப்படுகிறார்கள்.2015 ஆம் ஆண்டுக்கு ஆண்டு மேற்கு தாம்பரம் பகுதியில் 49 சென்டி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.