Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்…. இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை…!!

முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான சிங்கம், வேட்டைக்காரன்,அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் கடைசியாக நடித்த சைலன்ஸ் திரைப்படம் தோல்வியில் முடிந்தது.

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா || Tamil cinema Anushka Shetty To  Romance With Naveen Polishetty

இதனால் அனுஷ்கா தனது அடுத்த படத்திற்கான தேர்வை கவனமாக செய்துவருகிறார். அதன் அடிப்படையில் இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க இருக்கும் காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். பெரிய முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அனுஷ்கா தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |