Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகைக்கு நண்பர்கள் அளித்த சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ…!!

பிரபல சின்னத்திரை நாயகியான ஹரிப்பிரியா இசைக்கு அவரது நண்பர்கள் மிகப்பெரிய சர்ப்ரைஸை அளித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஹரிப்ரியா. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் இவர் தன் பெயரை ஹரிப்பிரியா இசை என்றே மாற்றிக்கொண்டார். இந்நிலையில் ஹரிப்ரியா இசையின் நண்பர்கள் அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளனர். அது என்னவென்றால், ஹரிபிரியா இசைக்கு சிம்ரன் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் ஹரிப்பிரியாவின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிம்ரனை ஹரிப்பிரியா சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த சர்ப்ரைஸ் கண்ட ஹரிப்ரியா மிகவும் மகிழ்ச்சி அடைந்து சிம்ரனை கட்டி அணைத்துக்கொண்டார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CMAYH81DtX9/

Categories

Tech |