Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை மீட்க முடியல….. ”வெட்கக் கேடானது” …. திருமாவளவன் வேதனை …!!

24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாநில , தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு முழுவதும் சுஜித் மீண்டு வரவேண்டுமென்று பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். #prayforsurjith என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. 24 ஆடியில் சிக்கி இருந்த சுஜித் தற்போது 70 அடிக்கும் மேலாக சிக்கியுள்ளது.

Image result for thirumavalavan

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , 20 மணி நேரமாகியும் மீட்கப்படாமல் தற்போது 70 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை அரசு வேகமாக செயல்பட்டு காப்பாற்ற வேண்டும். ஆழ்துளை கிணற்றில் 24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று தனது ட்வீட்_டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |