Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித் மீட்புப்பணி : நிலவரம் என்ன ? மகனுடன் இரவு விசிட் அடித்த OPS …!!

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

 

ரிக் இயந்திரத்தின் மூலம்  தொடர்ந்து குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அது சரி செய்யப்பட்டு  40 அடி வரை தோண்டப்பட்டடுள்ளது. மேலும் அதிகமான பாறை இருப்பதால் பணியின் வேகத்தில் மிகவும் தொய்வு ஏற்பட்டதையடுத்து இதைவிட 3 , 4 மடங்கு விசை கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Image result for o.panneerselvam RAVINDRANATHKUMAR

நடைபெறும் மொத்த பணியையும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் , வெல்லமண்டி நடராஜன் கண்காணித்து வருகின்றனர். மாலை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வந்த நிலையில் இரவு 11.40_க்கு எதிர்பாராத விதமாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிகழ்விடத்துக்கு வந்து ஆய்வு செய்த்தார். அவருடன் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தேனி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் உடனிருந்தனர். துணை முதல்வரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை நடந்த பணிகள் குறித்து விளக்கினார்.

Categories

Tech |