நடிகர் சூர்யாவின் புதிய திரைபடத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என தகவல் வெளியானது.
#Anirudh to compose music for #Suriya – #Siva project..?? 😃
If this is true then oru positive vibe added to the project..👌💥🤝 pic.twitter.com/6gQ5VdNlmO
— Laxmi Kanth (@iammoviebuff007) March 22, 2022
இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படத்தில் டி இமான் இசையமைப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாகவே அனிருத் சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது