Categories
சினிமா தமிழ் சினிமா

நாயகனாக உருவெடுக்கும் சூரி…. ரஜினி படத்தின் தலைப்பு…. படக்குழு பேச்சுவார்த்தை….!!

சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு விடுதலை என பெயர் சூட்ட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் கடந்த 1986 ஆம் ஆண்டு சிவாஜி மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான படத்தின் பெயரும் விடுதலை.

ஆகையால் அப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த அனுமதி வேண்டி படக்குழு சமந்தப்பட்ட நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |