Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நாங்கள் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. வேண்டுமானால் மாநில அரசுகள், மதுபானங்களை வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தெரிவித்தது. ஆன்லைன் மதுவிற்பனையை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |