Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை உடனடியாக செயல்படுத்தவும், COVID தொற்றுநோயைக் கையாள்வதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மேலும், தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு தகுந்த நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய அரசு ஏப்ரல் 7ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |