ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ள வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது.
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவி விலக்கப்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யக் கூடிய நடவடிக்கையை வருகின்ற 24ஆம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியில் இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களிலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் எவரும் பங்கேற்கவில்லை. இத்தகைய காரணத்தால் சச்சின் பைலட்டின் துணை முதலமைச்சர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
அதே சமயத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனடிப்படையில் வழக்கை விசாரணை செய்த ஹைகோர்ட் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டது. இத்தகைய தடைக்கு எதிராக சபாநாயகர் சி.பி.ஜோஷி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார்.
இத்தகைய விவகாரத்தினை ஐகோர்ட் நாளை விசாரிக்க இருக்கின்றது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையால் காங்கிரஸ் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது. இத்தகைய வழக்கினை அரசியல் ரீதியாக கையாள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.