உலகநாயகன் கமலஹாசன் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் சினிமா துறையை தாண்டி அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் வரும் ஜனவரி 26-ஆம் தேதி புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நிகழ்ச்சியின் போது அவர் மகாத்மா காந்திஜி போற்றிய கதர் ஆடைகளை லேட்டஸ்ட் முறையில் அமைக்கும் புதிய தொழிலை துவங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவர் கூறியிருந்த இந்தப் புதிய தொழிலை வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு துவங்க உள்ளார். மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏழை நெசவாளருக்கு ஆதரவு தாருங்கள் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் தெரிவித்திருக்கிறார்.
Let's have a large celebration for our Republic Day.
And a smaller one for #khhk.
KHHK is coming to you .
Celebrate Khaddar, remember us.Thanks for all the enquiries and love . #KHHK COMING ONLINE JANUARY 26th INSTANT. pic.twitter.com/ev75gwM8Is
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022