Categories
சினிமா தமிழ் சினிமா

கோடை வெயிலில் ஐஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் குயில் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்;

கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஆடுவது, பாடுவது உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, குடும்பத்தோடு பொழுதை கழிப்பது என நேரத்தை செலவிடுகின்றனர். அதனை அவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு, தனது ரசிகர்களுடன் உரையாடியும் கொண்ருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவின் சர்ப்ரைஸ்;

இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அதில் பிரியங்கா முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். அவர் தற்போது ஒரு பாடலை பாடியுள்ளார். அப்பாடலை அவர் சமூக வலைதள பக்கத்திலும் பதிவு செய்தார். இப்பொழுது அந்த பாடல் பலரிடையே வைரலாகி கொண்டிருக்கிறது.

குயில் போல் மென்மையான குரல் கொண்ட பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அசத்திய ‘சின்னச் சின்ன வண்ணக் குயில் ‘ என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த அரங்கத்தையும், பல ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் என்றே சொல்லலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் பாடல் வெளியிட்டது ரசிகர்களுக்கு கோடைவெயிலில் கிடைத்த ஐஸ் போல் உள்ளதாம்.

https://www.instagram.com/tv/B_XMvcfDYp6/

Categories

Tech |