Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி ஒரே டிக்கெட் தானா?”….. மாஸ் பிளான் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநில போக்கவரத்து துறை, சி.எம்.டி.ஏ., மாநகரப் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சி ஆகிய பல்வேறு துறைகள் அடங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் படுத்தக்கூடிய நோக்கில் CUMTA கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் யாரும் இந்த திட்டத்தை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு தான் சில விதிகள் கொண்டுவரப்பட்டது. ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்கு போக்குவரத்துறை அமைச்சர் தான் தலைவராக இருந்தார்.

இதற்கான சட்டத்தில் 2021 திருத்தம் செய்யப்பட்டு தலைவராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் CUMAT திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டார். இதற்கு நடப்பாண்டில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். மேலும் CUMTA முற்றிலும் புதுப்பிக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில்  வீட்டு வசதி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது‌. அதன்படி தற்போது 18க்கும் மேற்பட்ட அமைப்புகள், ஆணையம் உள்ளிட்டவை CUMTA கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் CUMTA முதல் கூட்டம் அடுத்த வாரம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இந்த ஆணையத்தின் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த மொபைலிட்டி பிளான், பொதுவான டிக்கெட் பயன்பாடு, மல்டி மாடல் ஒருங்கிணைப்பு, MRTS வணிகமயமாக்கல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. CUMTA வின் முக்கிய திட்டமாக Common Ticket வர உள்ளது. இதனை 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரே ஒரு டிக்கெட் எடுத்தால் போதும் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ பல்வகைப் போக்குவரத்தில் பயணிக்க முடியும்‌. இதனால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு, விபத்துக்கள் ஆகியவை பெரிதும் குறையும் என்று கூறப்படுகிறது. இந்த டிக்கெட் வசதிக்காக மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து எவ்வளவு நேரத்தில் வந்து சேருவோம், எந்த இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் போன்ற விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். இதற்காக டெண்டர் கோரப்பட்டு பொதுவான டிக்கெட் பயன்படுத்துவது விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் பொதுவான டிக்கெட் பயன்படுத்தக்கூடிய வகையில் CUMTA ஆலோசித்து அடுத்த கட்ட திட்டங்களை முடக்கி விடப்பட்டுள்ளது.

Categories

Tech |