Categories
அரசியல்

Superனு அவுங்களே சொல்லி இருக்காங்க- நீங்களே புரிஞ்சுக்கோங்க… எடப்பாடி பெருமிதம் …!!

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் கொரோனா பரவல் நம் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்லா இருக்குன்னு அவுங்களே சொல்லி இருக்காங்க, இது பாராட்டுக்குரியது தான. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அதிகமாக எண்ணிக்கையில டெஸ்ட் பண்ணனும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவக் கூடியது.  சாதாரண மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி, ஏழை மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி, அப்படிபட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தான் அதிக அளவில் நாங்கள் டெஸ்ட் பண்றோம்.

இதான் எங்க கடமை:

அதிக அளவில் டெஸ்ட் பண்ற காரணத்தால்தான் நோய் பரவலை கண்டறிய முடிகிறது.இப்படி கண்டறிந்தால் தான் குணப்படுத்தி அனுப்ப முடியும். நோய் பரவலை தடுக்க முடியும், இதுதான் எங்களுடைய கடமையாக இருந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். மற்ற மாநிலத்தில் எப்படி இருக்குனு அங்க போய் பார்த்தால் தான் தெரியும்.  குறைவாக டெஸ்ட் எடுக்குற காரணத்தால் தான் குறைஞ்சு இருக்குது. எதற்காக சொல்கின்றேன் என்றால் மகாராஷ்டிராவில் இருந்து வராங்க, எவ்வளவு பேருக்கு தொற்று இருக்கின்றது என்பதை தினம்தோறும் நம்முடைய சுகாதாரத் துறை மூலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

நீங்களே புரிஞ்சுக்கோங்க:

பிற மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களை பரிசோதனை செய்ததில் 1,620 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிற மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு நோய் பரிசோதனை செய்ததில் மட்டும் ஆயிரத்து 620 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நம்ம மாநிலத்தில் எப்படி ? பரிசோதனை செஞ்சு இருக்கோம்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க. நாங்க யாரையும் குற்றம் சொல்ல.

அர்ப்பணிப்பு :

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை அதிக அளவிலே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, யாருக்கும் தொற்று ஏற்பட்டு இருந்தால் அவர்களை கண்டறிந்து,  அவர்களை குணமடைய செய்வது தான் எங்களுடைய கடமை என்ற அடிப்படையில் நாங்கள் செயலாற்றிக் கொண்டு கொண்டிருக்கின்றோம். அது மட்டுமல்ல அர்ப்பணிப்பு உணர்வோடு நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

கட்டுக்குள் கொரோனா:

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தனக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  இருபது நிமிஷம், பத்து நிமிஷம் தொற்று ஏற்பட்டவரோடு பேசிக் கொண்டிருந்தாலோ தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமை இருந்தாலும் கூட நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், நான் குறிப்பிட்ட இந்த துறையை சேர்ந்த பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் தான் கொரோனா பரவல் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்  இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கின்றேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |