Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ஷாப்பிங் முதல் பயணம் வரை அனைத்துக்கும் NCMC …. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…..!!!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னையில் டிசம்பர் மாத இறுதிக்குள் NCMC (தேசிய பொது மொபிலிட்டிக்கார்டுகள்) அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ரீசார்ஜ் செய்து கொண்டால் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் கார்டை பயன்படுத்தி பயணம் செய்து கொள்ளலாம். இந்த கார்டை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே மெட்ரோ கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த கார்டை பயன்படுத்தவே அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஒரே நாடு ஒரே கார்டு முறையில் அறிமுகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார்டு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணம் மட்டுமின்றி ஷாப்பிங் செய்தல் மற்றும் கார் பார்க்கிங் போன்றவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பலவிதமான கார்டுகளின் பயன்பாடு குறைந்து ஒரே கார்டு என்ற முறை நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |