சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷாலுடன் காதலா? என்ற கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பதிலளித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் . இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ரம்யா பாண்டியன், வனிதா ,பாலாஜி ,உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். தற்போது இரண்டாவது சீசனும் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மதுரை முத்து, ஷகிலா, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ர லட்சுமி ,தர்ஷா குப்தா ,தீபா ,கனி ஆகியோர் குக்குகளாக பங்கேற்றுள்ளனர் .
மேலும் சூப்பர் சிங்கர் பிரபலம் சிவாங்கி, புகழ், பாலா ,சுனிதா ,ஷரத், மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர். இவர்களில் மிகவும் சுட்டித்தனமானவர் சிவாங்கி . சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த சிவகார்த்திகேயன் கூட சிவாங்கியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில் சிவாங்கியிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் சூப்பர் சிங்கர் சாம் விஷாலை காதலிக்கிறீர்களா எ?ன கேட்டுள்ளார் . இதற்கு பதிலளித்துள்ள சிவாங்கி அவர் என் நெருங்கிய நண்பர். அவரை நான் காதலிக்கவில்லை’ என கூறியுள்ளார்.