சுவையான பட்டாணி மசாலா செய்வது எப்படி ….
தேவையான பொருட்கள் :
பட்டாணி – 1/2 கப்
பல்லாரி – 2
தக்காளி – 2
தயிர் – 1/4 கப்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் , உப்பு மற்றும் தக்காளி சேர்த்து, வதக்கி அதனுடன் தயிர் மற்றும் வேகவைத்த பட்டாணியை சேர்க்க வேண்டும் . பின் இதனுடன் கரம் மசாலாவைத் தூவி, கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பட்டாணி மசாலா தயார் !!!