இனி வணிகர்களுக்கு வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை போன் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். போன்பே நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வணிகர்கள் இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நோட்டிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆப்பில் phone pebusiness என்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.