வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கரீனா கபூர், கார்த்திக் ஆரியனுடன் கலந்துகொண்டார்.
பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் தன்னுடைய உடல்தோற்றத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இவர் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரித்திருந்தார். இவரின் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://www.instagram.com/p/B8DtQR1HOj3/?utm_source=ig_web_button_share_sheet
இந்நிலையில் வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா ஏற்பாட்டில் பேஷன் ஷோ நிகழ்ச்சியொன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரீனா கபூர், கார்த்திக் ஆரியனுடன் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
https://www.instagram.com/p/B8CVcBJHSYn/?utm_source=ig_web_button_share_sheet
இந்த புகைப்படங்களில் முன்பு இருந்ததை போலவே மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
https://www.instagram.com/p/B8CTsg-nhMH/?utm_source=ig_web_button_share_sheet
பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன் ‘சோனு கே திட்டு கி ஸ்வீட்டி’ என்ற ஹிந்தி படத்தின் வெற்றிக்கு பிறகு பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறியிருக்கிறார். இவருக்கு இணையத்தில் ரசிகைகளின் கூட்டம் பெருமளவில் உள்ள நிலையில், கடந்த வருடம் அவரிடம் ரசிகை ஒருவர் காதலை சொன்ன காணொலி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.