செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறார். இந்த 8 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு, 76- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம்.
நம்முடைய பிரதமர் அவர்களுடய கனவு நமது நாடு 100-வது சுதந்திர தினத்தில மிகப்பெரிய வளர்ச்சி இருக்க வேண்டும். 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கு வேண்டும். அனைத்து மக்களுக்கும் உழைக்கின்ற நாடாக இருக்க வேண்டும்.
அந்த கனவோடு நம்முடைய இளைஞர்கள் அனைவரும் இணைந்து இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் செல்வதற்காக நாம் அனைவரும் நம்முடைய பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய பாரத ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், நிர்வாகிகள் உற்சாகத்துடன் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகிகள், தலைவர் என எல்லாரும் கடுமையாக தங்களுடைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசாங்கத்தின் உடைய திட்டங்களை மக்களிடையே எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நமது பிரதமருடைய அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஆகட்டும், ஜல்ஜீயம் என்ற குடிநீர் திட்டம் ஆகட்டும், மருத்துவ காப்பீடு திட்டம் ஆகட்டும், பிரைம் மினிஸ்டர் உடைய இன்சூரன்ஸ் திட்டம் ஆகட்டும்.
இது வந்து விவசாயிகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி ஒரு விவசாய சன்மான் நீதி என்பது நம்முடைய பிரதமர் நேரடியாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இந்த பயனாளிகளை எல்லாம் சந்தித்து, பயனாளிகளுடன் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கட்சியை அவர்கள் அடுத்த நிலைமைக்கு எடுத்துக் கொண்டு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.