Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அட்டகாசமான 5 முக்கிய மாற்றங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் வாட்ஸப் நிறுவனம் தற்போது ஐந்து பயனுள்ள மற்றும் அற்புதமான அம்சங்களை கொண்டு வரவுள்ளது. அதன்படி விண்டோஸ் ஸ்டேடஸ்களுக்கான தனிப்பட்ட பதில்களை அனுப்பும் வசதியை கொண்டு வர whatsapp திட்டமிட்டுள்ளது .

வாட்ஸ் அப் டெவலப்மெண்ட் ட்ராக்கர் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.அடுத்ததாக வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்தியை மீண்டும் எடிட் செய்வதற்கான வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் அவ்வாறு செய்யும்போது மெசேஜில் எடிட் செய்யப்பட்டது என பயனர்களுக்கு காண்பிக்கப்படும்.அடுத்ததாக ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் உள்ள லிங்குகளை திறப்பதற்கான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அடுத்து வாட்ஸ் அப் செயலியில் புதிய தனி உரிமை அம்சம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது view once பைல்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்ய முடியும்.இறுதியாக வாட்ஸ் அப் அதன் குழு உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில் இதன் மூலம் ஒரு பயனர் whatsapp குழுவில் 1024 பேரை சேர்க்க முடியும்.

Categories

Tech |