தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது லத்தி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் 3 படங்களை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். அதாவது லத்தி படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார். அதன் பிறகு விலங்குகளை மையப்படுத்தி 2 படங்களை எடுக்க இருக்கிறாராம். இது அவரின் கனவு படம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு நடிகர் விஜய்யை நான் ஒரு ரசிகனாக எப்படி பார்க்கிறேனோ அப்படியே ஒரு கதையை எழுதி வருகிறேன். இந்த கதை ரெடியானதும் நான் விஜயை சந்தித்து கதை கூறுவேன். மேலும் விஜய் நடிக்கும் படத்தை நான் இயக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.