Categories
மாநில செய்திகள்

“காதி கிராப்ட் ஆடைகள்” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார். இவர் பண்டிகை கால விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் நவம்பர் மாதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பட்டு, பாலிஸ்டர் மற்றும் கதர் துணிகளுக்கு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசல் காஞ்சிபுரம் ஜரிகைகள் கொண்ட பட்டுப் புடவைகள் 5000 ரூபாய் முதல் விற்பனைக்காக வந்துள்ளது.

இதனையடுத்து அனைத்து ரக காட்டன் புடவைகள், ஆர்கானிக், களம்காரி காட்டன் புடவைகள் போன்றவைகளும் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புடவைகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு விதமான நிறங்களில் இருக்கிறது. மேலும் காதி கிராப்ட் நிறுவனத்தில் இந்த வருடம் 129 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில், காதி கிராம தொழில் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள், தேன் மற்றும் சோப்பு போன்றவைகளும் காதி கிராப்ட் நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |