சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது.
இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா தொடர் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது முடிவுக்கு வருகிறது என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.