Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நிலவும் போர் பதற்றம்…. இந்தியாவில் எண்ணெய் பற்றாகுறை ஏற்படுமா…?

உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் காரணமாக சூரியகாந்தி எண்ணெயின் விலை வெகுவாக அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்தியாவிற்கு தேவையான 75% சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது.

இதனால், இந்தியா முழுக்க அத்தியாவசியமான தேவையாக இருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. உக்ரைனில் பதற்ற நிலை இருப்பதால் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது உயரத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே,  எண்ணெய் விற்பனையாளர்கள், இறக்குமதி செய்யப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டால் விலை ஏற்றம் கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும், சூரியகாந்தி எண்ணெய்க்கு  பற்றாக்குறை ஏற்பட்டால், மக்கள் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் வாங்கத் தொடங்குவார்கள். அப்படி வாங்கும் பட்சத்தில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |