சன் டிவியின் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சன் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. அதன்படி சமையல் போட்டியை மையமாக வைத்து “மாஸ்டர் செப்” எனும் நிகழ்ச்சியை துவங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் விஜய் சேதுபதி இருக்கிறார். ஆகையால் ரசிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை காண மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலக அளவில் புகழ்பெற்ற சமையல் கலையின் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி!
விஜய் சேதுபதி அவர்களுடன்..
மாஸ்டர் செஃப் – தமிழ் | விரைவில்… #SunTV #MasterChef #MasterChefTamil #MasterChefOnSunTV pic.twitter.com/bHkL9HGunx
— Sun TV (@SunTV) May 9, 2021