Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் நிறுவனம் – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்று குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது . கொரோனாவால் நின்றுபோன படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்க பட்ட நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா பாதிப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் டுவிட் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ரஜினி உட்பட மற்ற படக்குழுவினருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், சூழ்நிலைகள் சரியாகும் வரை படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |