Categories
டெக்னாலஜி லைப் ஸ்டைல்

ஆபத்து அறிந்து செயல்படுங்கள் பெண்களே..!!

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை என்று நினைத்துவிடாதீர்கள், ஆபத்தும் அறிந்து செயல்படுங்கள்..

சமூக வலைதளங்களில், படத்தைப் பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார்.

தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலை தளங்களில் இணைந்திருக்கின்றனர்.

அவர்களில், மிகப் பெரும்பாலானோர், தங்களின் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப், கூகுள் பிளஸ் என நீளும் சமூக வலைதளங்களின் பட்டியலில், இணைந்திருப்பதே பெருமை என்று இளம் தலைமுறையினர் பலரும் நினைக்கின்றனர்.

தகவல் பகிரவும், தொடர்பு கொள்ளவும் பேருதவியாக இருக்கும் சமூக வலை தளங்களால் ஏற்படும் நன்மைகளைப் போலவே, தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன. இவை யாரும் தெரிந்து கொள்ள முயலுவதில்லை.

சமூக வலைதளங்களில், ஒருவருக்கு 100 நண்பர்கள் இருப்பதாக வைத்து கொண்டால், அவர்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும் படங்களும், தகவல்களும், அந்த 100 நண்பர்களுடைய நண்பர்களாலும் பார்க்கப்படுகின்றன.

அவர்களில் ஒருவர், தவறான எண்ணம் கொண்டவராக இருந்தாலும், படங்களை கெட்ட நோக்கத்துடன் பயன்படுத்திவிட முடிகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இன்றி, பெண்கள், தினமும் தங்கள் படங்களையும், குடும்ப படங்களையும் பதிவேற்றம் செய்கின்றனர்.

ஆகவே பெண்களே சமுக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

 

Categories

Tech |