Categories
உலக செய்திகள்

120 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் வெயில்.. கடற்கரையில் குவிந்து கிடக்கும் ரஷ்ய மக்கள்..!!

ரஷ்யாவில் கடந்த 120 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதால், மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.

கோடைகாலம் வந்தாலே அனலாய் கொதிக்கும் வெயிலிலிருந்து தப்புவதற்கு மக்கள் நீர்நிலைகள், குளிர்ச்சியான பகுதிகளுக்கு தான் செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் ரஷ்யாவில் உள்ள சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து கொண்டு, நீர்நிலைகளில் தஞ்சமடைகிறார்கள். தலைநகர் மாஸ்கோவிலும் இதேபோல்தான் கடந்த திங்கட்கிழமை அன்று 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 120 வருடங்களில் இல்லாத அளவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக, இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 40. 41 டிகிரி செல்சியஸ் சுட்டெரிப்பது மிக சாதாரணமான விஷயம். ஆனால் ரஷ்யா குளிர் பிரதேசம் என்பதால் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக்கூட  அந்நாட்டு மக்களால் தாங்க முடிவதில்லை.

Categories

Tech |